மீன் பிடித்தவர் தவறி விழுந்து சாவு
காவனூர் ஏரியில் மீன் பிடித்தவர் தவறி விழுந்து பலியானார்.
கே.வி.குப்பத்தை அடுத்த காவனூர் ஏரியில் ஆண் பிணம் ஒன்று தண்ணீரில் மிதந்து கொண்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவனூர் நிர்வாக அலுவலர் கலைவாணி, சப்- இன்ஸ்பெக்டர் தவமணி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி கொடுத்த புகாரின்பேரில் கே.வி.குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிணமாக கிடந்தவர் கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூரை சேர்ந்த குணசேகரன் (வயது 45) என்பது தெரிய வந்தது. வாய் பேச முடியாத இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 3-ந் தேதி மாலையில் நண்பர்களுடன் மேல்காவனூர் ஏரிக்கரையில் நின்று மீன்பிடித்துள்ளார். அப்போது ஏரியில் தவறி விழுந்து இறந்துள்ளார்.