தனியார் தோட்டத்தில் பற்றி எரிந்த தீ

கொடைக்கானலில் உள்ள தனியார் தோட்டத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்தது.

Update: 2023-07-30 19:45 GMT

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயிலும், பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் சில இடங்களில் மரம், செடிகளில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் நேற்று மதியம் கொடைக்கானலில், செயிண்ட் மேரிஸ் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சில மரங்கள் தீயில் எரிந்து கருகின. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கொடைக்கானல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மரங்களில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி மரங்களில் எரிந்த தீயை தீயணைப்பு படையினர் அணைத்தனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்