பூந்தமல்லி அருகே டிரான்ஸ்பார்மர் அருகே தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

பூந்தமல்லி அருகே டிரான்ஸ்பார்மர் அருகே தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-25 06:15 GMT

பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மருக்கு கீழ் பகுதியில் குப்பைகள் அதிக அளவில் தேங்கி கிடந்தது. இந்த குப்பைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென டிரான்ஸ்பார்மர் மீதும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து டிரான்ஸ்பார்மருக்கு அடியில் எரிந்த தீயை அணைத்தனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்