திருமண மண்டபத்தில் தீ விபத்து

திருமண மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-07-07 19:31 GMT

துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜமால் என்பவருக்கு சொந்தமான திருமண மண்டபம் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த திருமண மண்டபத்தில் உள்ள அலுவலகத்தில் மின் கசிவால் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்த துவரங்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் டி.வி., கண்காணிப்பு கேமரா, பதிவிறக்க பெட்டி மற்றும் பொருட்கள் சேதம் அடைந்தன.

Tags:    

மேலும் செய்திகள்