களியக்காவிளை:
குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள புதரில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியில் காய்ந்து நின்ற புல், செடிகளில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த தீ மள... மள...வென எரிந்து பக்கத்தில் உள்ள தென்னந்தோப்புகளிலும் பரவியது. இதில் அங்கு நின்ற சில மரங்களும் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து அந்த பகுதியினர் குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் ெகாடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.