தைலமர சருகுகளில் தீப்பிடித்தது
அரிமளம் நெய்வாசல்பட்டியில் தைலமர சருகுகளில் தீப்பிடித்தது.
அரிமளம் ஒன்றியம் நெய்வாசல்பட்டி ஆலமரம் பஸ் நிறுத்தம் அருகே செட்டிவயல் தோப்பு உள்ளது. இங்கு தெட்சிணாமூர்த்தி, கணேசன், வெள்ளைச்சாமி, முத்துகோனார், மெய்யப்பக்கோனார், அரங்ககோனார், மாரிகோனார் ஆகியோருக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இந்த தோப்பில் பனைமரம், தென்னை மரம், தைல மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன. இந்தநிலையில் சமீபத்தில் இங்குள்ள தைலம் மரத்தை வெட்டி கிளைகளை கீழே போட்டுள்ளனர். அதிலிருந்த சருகுகள் 5 ஏக்கர் பரப்பளவில் பரவி கிடந்துள்ளது. இந்தநிலையில் நேற்று அந்த சருகுகள் மள மளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து புதுக்கோட்டையிலிருந்து தீயணைப்பு நிலைய அதிகாரி புருஷோத்தமன் தலைமையிலான வீரர்கள் அங்கு வந்து சுமார் 1½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.