உப்பட்டி அருகே தேயிலை தோட்டத்தில் தீ விபத்து
உப்பட்டி அருகே தேயிலை தோட்டத்தில் தீ விபத்து
பந்தலூர்
பந்தலூர் அருகே உப்பட்டியில் இருந்து பொன்னானி செல்லும் சாலையில் நெல்லியாளம் அருகே சிலர் பீடி புகைத்துவிட்டு சாலையோரத்தில் வீசி சென்று உள்ளார்கள். இதில் இருந்து பற்றிய தீ புற்களில் பரவியதோடு, அந்தப்பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் தேயிலை செடிகள் தீ பற்றியது. தற்போது பனி மற்றும் வெயில் காரணமாக தேயிலை செடிகள் கருகி காணப்படுகிறது. இதனால் அந்த தோட்டத்தில் தேயிலை செடிகளில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி தீயணைப்பு துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தோட்ட ெதாழிலாளர்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். எனினும் அரை ஏக்கர் பரப்பளவில் தேயிைல செடிகள் எரிந்து நாசம் ஆனது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.