ஆத்தூரில் குடோனில் தீ விபத்து

Update: 2022-09-10 19:59 GMT

ஆத்தூர்:-

ஆத்தூர் பஸ் நிலையம் அருகே சினிமா தியேட்டர் நடத்தி வருபவர் ஞானவேல். இவருக்கு சொந்தமான குடோன் ஜோதி நகர் டாக்டர் வரதராஜு தெருவில் உள்ளது. இந்த குடோனில் பல்வேறு உபயோகமற்ற தேவையில்லாத பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென குடோனில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீ மளமள என பரவியது. ஆத்தூர் தீயணைப்பு படையினர் கீரிப்பட்டியில் கோவில் தேர்த்திருவிழாவிற்கு சென்று விட்டதால் வர தாமதமானது. பின்னர் அரைமணி நேரம் கழித்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து தீயில் நாசமானது. மின்சார வயர் உரசியதில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இது பற்றி ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்