குழந்த தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவன உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

குழந்த தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவன உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-03-10 20:06 GMT

சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையில் தொழிலாளர் துறையினர் ஆய்வு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 2 குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர். அவர்களை பணியமர்த்திய நிறுவன உரிமையாளரின் மீது குழந்தை தொழிலாளர் சட்டப்படி நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து நேற்று நீதி மன்றம் வழங்கப்பட்ட தீர்ப்பின் முடிவில் நிறுவன உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. எனவே 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித தொழில்களில் ஈடுபடுத்தினாலும் மற்றும் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தினால் ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த தகவலை திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்