காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேருக்கு தலா ரூ.40 ஆயிரம் அபராதம்

திருவண்ணாமலை திப்புக்காடு பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேருக்கு தலா ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-01-20 13:26 GMT

திருவண்ணாமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட திப்புக்காடு வனப்பகுதியில் சிலர் அத்துமீறி நுழைந்து காட்டு பன்றிகளை வேட்டையாடுவதாக வனச்சரக அலுவலர் ஸ்ரீனிவாசனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையில் வனக்காப்பாளர்கள் முகமது சுல்தான், சிரஞ்சீவி, மருவரசன், பாலாஜி ஆகியோர் கொண்ட குழுவினர் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காட்டுப்பகுதியில் அத்துமீறி உள்ளே நுழைந்து காட்டுப்பன்றியை வெடி வைத்து வேட்டையாடி அதை கொளுத்தி அறுத்துக் கொண்டிருந்த சு.ஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்த தனசேகர், பன்னீர்செல்வம் ஆகிய 2 பேரை சுற்றி வளைத்து கையும், களவுமாக பிடித்தனர்.

பின்னர் அவர்களை வனத்துறையினர் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் தலா ரூ.40 ஆயிரம் என ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு விடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்