மராட்டிய மாநில சுற்றுலா பஸ்சுக்கு ரூ.37 ஆயிரம் அபராதம்
மராட்டிய மாநில சுற்றுலா பஸ்சுக்கு ரூ.37 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அதிகாரி குமார் தலைமையிலான குழுவினர் நேற்று ஸ்ரீரங்கம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மராட்டிய மாநில பதிவு எண் கொண்ட சுற்றுலா பஸ் பக்தர்களுடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தது. அந்த பஸ்சின் ஆவணங்களை சோதனை செய்த போது, தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் பஸ்சை இயக்குவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பஸ் உரிமையாளருக்கு ரூ.37 ஆயிரத்து 764 வரியுடன் சேர்த்து அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வரி செலுத்தாமலும், இன்சூரன்சு இல்லாமலும் இயக்கப்பட்ட பொக்லைன் எந்திரத்தின் உரிமையாளருக்கு ரூ.12 ஆயிரத்து 560 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதம் உடனடியாக வசூல் செய்யப்பட்டது.