அதிக பாரம் ஏற்றிய லாரிக்கு ரூ.37 ஆயிரம் அபராதம்

தக்கலையில் அதிக பாரம் ஏற்றிய லாரிக்கு ரூ.37 ஆயிரம் அபராதம்

Update: 2023-05-26 20:53 GMT

தக்கலை, 

தக்கலை போலீசார் நேற்று காலையில் தக்கலை பழைய பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கேரளாவுக்கு ஜல்லி ஏற்றி சென்று கொண்டிருந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றி செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த லாரிக்கு போலீசார் ரூ.37 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்