கேரளாவில் இருந்து கொண்டு வந்து பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிய லாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
கேரளாவில் இருந்து கொண்டு வந்து பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டியதால் லாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆரல்வாய்மொழி,
கேரளாவில் இருந்து கொண்டு வந்து பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டியதால் லாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம்
கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகள் மற்றும் மீன் கழிவுகளை லாரிகளில் ஏற்றி வந்து குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கொட்டுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாகனங்களை சிறைபிடித்து வந்ததாலும், அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாலும் கழிவுகள் ஏற்றி வருவது சற்று குறைந்தது.
இந்தநிலையில் நேற்று மாலையில் ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட தேவசகாயம் மவுண்ட் 4 வழிச்சாலை பகுதியில் உள்ள ஒரு லாரியில் இருந்து மூடை, மூடையாக கழிவுகள் இறக்கப்பட்டதை அந்த வழியாக சென்ற ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் பார்த்தார். பின்னர் அவர் டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் மூடைகளில் பிளாஸ்டிக் கழிவுகளும், வீணான காகித கழிவுகளும் என தெரிய வந்தது. மேலும் கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்து கொட்டியுள்ளனர். இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசாரும் விரைந்து வந்து விசாரித்தனர்.
இதனையடுத்து கழிவுகளை கொட்டியதற்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.