காலாவதியான பிஸ்கெட்டை விற்ற கடைக்காரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

நாகர்கோவிலில் காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டை விற்ற கடைக்காருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2022-08-10 19:56 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டை விற்ற கடைக்காருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

காலாவதியான பிஸ்கெட் விற்பனை

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் காஜா ரமேஷ் ராஜா. இவர் நாகர்கோவில் கே.பி.ரோட்டில் உள்ள ஒரு கடையில் ரூ.145 கொடுத்து சுகர்கிராக்கர் என்ற பிஸ்கெட் பாக்கெட் வாங்கினார். இதை சாப்பிட்ட காஜா ரமேஷ் ராஜாவின் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

உடனே பிஸ்கெட் பாக்கெட்டின் தயாரிப்பு தேதியை அவர் பார்த்தபோது அது காலாவதியாகியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காஜா ரமேஷ் ராஜா வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். அதன் பிறகும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு

வழக்கை குமரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் கடைக்காரரின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட காஜா ரமேஷ் ராஜாவுக்கு நஷ்ட ஈடாகவும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.13 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட கடைக்காரர் வழங்க வேண்டும் உத்தரவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்