மாடு மீது மோட்டார்சைக்கிள் மோதி நிதி நிறுவன அதிகாரி சாவு

மாடு மீது மோட்டார்சைக்கிள் மோதி நிதி நிறுவன அதிகாரி சாவு

Update: 2022-12-22 20:03 GMT

பூதலூரில் மாடு மீது மோட்டார்சைக்கிள் மோதி நிதி நிறுவன அதிகாரி பரிதாபமாக இறந்தார்.

தனியார் நிதி நிறுவன அதிகாரி

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள ஆலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 32). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் பூதலூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பூதலூர் அகிலாண்டேஸ்வரி நகர் அருகே வந்தபோது, திடீரென மாடு குறுக்கே வந்தது. இதனால் சரவணன் பிரேக் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாடு மீது மோட்டார்சைக்கிள் மோதியது.

சாவு

இதில் படுகாயமடைந்த சரவணனை அக்கம்பத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரவணன் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இந்த விபத்தில் மாடும் இறந்தது.

இதுகுறித்து சரவணனின் மனைவி ஸ்ரீதேவி (24) கொடுத்த புகாரின் பேரில் பூதலூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பூதலூர் நகரில் பிரதான சாலையில் நான்கு சாலை சந்திப்பு வரை காலை தொடங்கி இரவு நேரங்களில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். எனவே சாலையில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்தி விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்