விபத்தில் காயம் அடைந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் சாவு

விபத்தில் காயம் அடைந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் இறந்தார்.

Update: 2022-12-14 18:54 GMT

நெல்லை வடக்கு தாழையூத்து கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சிங்கராஜா மனைவி அந்தோணி புஷ்பம் (வயது 30). கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இவர் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 11-ந் தேதி இரவு தனது மொபட்டில் கன்னியாகுமரி- மதுரை நான்குவழி சாலையில் கீழநத்தம் விலக்கு பகுதியில் அந்தோணி புஷ்பம் சென்றுகொண்டு இருந்தார். அப்போது சாலையில் இருந்த இரும்பு தடுப்பில் எதிர்பாராதவிதமாக மோதி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் நேற்று காலையில் சிகிச்சை பலனளிக்காமல் அந்தோணி புஷ்பம் உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்