வயலில் வேலை செய்த விவசாயி மின்சாரம் பாய்ந்து பலி

வேதாரண்யம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-09-28 18:45 GMT

வேதாரண்யம்;

வேதாரண்யம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

விவசாயி

வேதாரண்யம் தாலுகா தென்னம்புலம் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 70). விவசாயியான இவர் நேற்று அவரது வீட்டின் எதிரே உள்ள தனக்கு சொந்தமான வயலில் நெல் விதைத்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது வயலில் ஏற்கனவே இடி தாக்கி பனைமரம் சேதம் அடைந்திருந்த நிலையில், அந்த பனைமரம் திடீரென முறிந்து அருகே சென்ற மின் கம்பியில் விழுந்தது.

மின்சாரம் பாய்ந்தது...

இதில் மின்சார கம்பி அறுந்து கீழே வயலில் நெல் விதைத்து கொண்டிருந்த வடிவேல் மீது விழுந்தது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே வடிவேலு உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரியாப்பட்டினம் போலீசார், வடிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்