கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2022-12-08 18:41 GMT

கறம்பக்குடி அருகே வெள்ளாள கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 40). விவசாயி. இவரது வீட்டிற்கு நேற்று உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு விருந்து வைப்பதற்காக வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த அவரது கோழிகளை பிடிப்பதற்காக விரட்டி சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள 50 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் இதுகுறித்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்ற தீயணைப்பு மீட்பு பணி வீரர்கள் கிணற்றில் இறங்கி மாரியப்பனை மீட்டு கயிற்றின் மூலம் மேலே கொண்டு வந்தனர். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அவர் 108 ஆம்புலன்சு மூலம் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கோழிகளை விரட்டி சென்றவர் கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்