மருந்து என விஷத்தை குடித்த விவசாயி சாவு
கலவை அருகே மருந்து என விஷத்தை குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கலவையை அடுத்த வேம்பி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 67), விவசாயி. கடந்த 10 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி வழக்கமாக சாப்பிட வேண்டிய மருந்துக்கு பதிலாக, விவசாய பயிர்களுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை தவறுதலாக குடித்துள்ளார்.
உடனடியாக அவரை கலவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை அளித்து, பின்னர் செய்யார் அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கலவை சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.