விழுப்புரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு

விழுப்புரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தார்.

Update: 2022-07-10 14:50 GMT

செஞ்சி, 

விழுப்புரம் அருகே உள்ள வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் சத்யராஜ்(வயது 38). விவசாயி. சம்பவத்தன்று சத்யராஜ், தனது தந்தை தங்கவேலுடன், நிலத்திற்கு சென்று மோட்டார் போட்டு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தனர். அப்போது கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா என்று சத்யராஜ் பார்க்க சென்றபோது, எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை தங்கவேல், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே சத்யராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கெடார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்