கலெக்டர் அலுவலகத்துக்கு பருத்தி செடியுடன் வந்த விவசாயி

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு பருத்தி செடியுடன் வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-20 19:17 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள காணிக்கூர் ஊராட்சிக்குட்பட்ட ஒச்சாத்தேவன்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயி முருகவேல் இலைகருகல் நோயால் பாதிக்கப்பட்ட பருத்தி செடியுடன் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தவர் கண்ணீர் மல்க பருத்தியை காட்டி கூறியதாவது:-

கடலாடி அருகே உள்ள காணிக்கூர் மற்றும் எம்.கரிசல்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இந்த ஆண்டு பருத்தி விவசாயம் மேற்கொண்டோம். முறையாக தண்ணீர் பாய்ச்சியும் இலைகருகல் நோயால் பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டன. இதுகுறித்து வேளாண் அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்தும் பருத்தி செடியை காக்க அதிகாரிகள் முன்வரவில்லை. ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் செலவிட்டு வளர்த்த பருத்தி செடிகள் பறிக்கும் தருவாயில் இலைகருகல் நோயால் கருகிவருவதை பார்க்க வேதனையாக உள்ளது. இந்த பருத்தி விளைந்தால் ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பருத்தி கிடைக்கும். ஆனால் இலைகருகல் நோயால் அனைத்தும் வீணாகி விட்டது. பருத்தி அறுவடை செய்யும் சூழலில் தற்போது இலைகருகல் நோயால் பருத்தி செடிகள் கருகி எந்தவித பலனுமின்றி போய்விட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என நேரில் வந்து மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்