ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை விழிப்புணர்வு வாகனம்

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது.

Update: 2022-11-28 18:45 GMT

ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை இரு வார விழா நவம்பர் 21-ம் தேதி முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை அனுசரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை விழிப்புணர்வு வாகனம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தென்காசி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா தொடங்கி வைத்தார். இந்த வாகனம் ஒலிபெருக்கி பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரம் வினியோகித்தல் ஆகிய பணிகளை மாவட்டம் முழுவதும் ஒரு வார காலத்திற்கு செய்ய உள்ளது. பிரசாரத்தின் போது ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சையின் சிறப்பு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து வேலை நாட்களிலும் இந்த சிகிச்சை நடைபெறுகிறது. விழிப்புணர்வு வாகனம் தொடக்க நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், உறைவிட டாக்டர் ராஜேஷ், மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வெள்ளைச்சாமி, மகப்பேறு பிரிவு முதன்மை குடிமை டாக்டர் புனிதவதி, அறுவை சிகிச்சை சிறப்பு டாக்டர்கள் சுவர்ணலதா, கார்த்திக், மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் முருகன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் டேவிட் ஞானசேகர், புள்ளி விவர உதவியாளர் வேலு, வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள், செயின்ட் மேரீஸ் செவிலியர் கல்லூரி பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்