ரோட்டில் சாய்ந்து விழுந்த மரம்

ரோட்டில் மரம் சாய்ந்து விழுந்தது.

Update: 2022-07-03 21:25 GMT

தாளவாடி:

தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் கோடிபுரம், காந்திநகர், தொட்டாபுரம், சிக்கள்ளி உள்பட 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன

இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் நெய்தாளபுரம் அருகே மூங்கில் மரம் ஒன்று சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் அந்த வழியாக பஸ்கள் உள்பட எந்தவித வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரோட்டில் விழுந்து கிடந்த மூங்கில் மரத்தை வெட்டி காலை 8 மணி அளவில் அகற்றினர். 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்