சாலையில் முறிந்து விழுந்த மரம்
கொடைக்கானலில் பலத்த காற்று வீசியதால் மரம் முறிந்து மலைப்பாதையில் விழுந்தது.
கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்று வீசுகிறது. மேலும் அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பகலில் பலத்த காற்று வீசியது. இதனால் பூம்பாறை, மன்னவனூர் கிராமங்களுக்கு செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்த பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை இணைந்து மரங்களை வெட்டி அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது. இதற்கிடையே மரங்கள் முறிந்து விழுந்ததால் சிறிதுநேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.