கன்னங்குறிச்சி:-
சேலம் கோரிமேட்டை அடுத்த சின்னக்கொல்லப்பட்டி தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 38), கொத்தனார். இவருக்கு செந்தாமரை என்ற மனைவியும், சர்வேஷ் என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு முருகன் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது தன்னுடைய மனைவியை ஜூஸ் வாங்கி வர கடைக்கு அனுப்பினார். சிறிது நேரத்தில் மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தானே தீ வைத்துக் கொண்டார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் முருகன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.