தண்ணீர் குடித்த போது நேர்ந்த விபரீதம்:சில்வர் குடத்துக்குள் தலை சிக்கியதால் துடிதுடித்த நாய் - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

சில்வர் குடத்துக்குள் தலையை விட்டு, தண்ணீர் குடித்த போது தலை சிக்கிக்கொண்டதால் நாய் ஒன்று துடித்துடித்து போனது. அந்த நாயை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Update: 2023-06-24 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அண்ணா சத்யா தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். நேற்று இரவில் நாய்க்கு தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. இறுதியாக அங்கு இருந்த சில்வர் குடத்தில் பாதிஅளவில் தண்ணீர் இருந்துள்ளது.

கடுமையான தாகத்தில் இருந்த அந்த நாய், சில்வர் குடத்துக்குள் தலையை விட்டு, தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்தது. ஆனால், துரதிஷ்டவசமாக தலையை எடுக்க முடியாமல் போனது.

இதையடுத்து, நாய் தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருந்தது. சத்தம் கேட்டு, கோபாலகிருஷ்ணன் சென்று பார்த்தார். அங்கு, நாயின் தலை குடத்துக்குள் சிக்கி இருந்தது. அவர் மீட்க முயன்றும் முடியவில்லை.

துடிதுடித்த நாய்

இதையடுத்து, உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் நேரில் வந்து, 'கட்டிங்' கருவியை கொண்டு, குடத்தின் மேல்பகுதியை வெட்டி எடுத்தனர். இதன் பின்னர் நாய், மீட்கப்பட்டது.

சுமார் 45 நிமிடமாக குடத்துக்குள் தலை சிக்கியதால் துடிதுடித்து போன அந்த நாய், தப்பித்தோம் சாமி என்றி கூறிவது போன்று ஓட்டம் பிடித்தது. இந்தகாட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்