மாவட்ட அளவிலான விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும்
வீ.சி.மோட்டூர் ஊராட்சியில் மாவட்ட அளவிலான விளையாட்டு மைதானம் அமைத்துத்தர வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் பி.முனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்தில் வைத்தியலிங்க சத்திர மோட்டூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவராக பி.முனிசாமி உள்ளார்.
ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து தலைவர் கூறியதாவது:-
நடைபெற்ற பணிகள்
15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்தில் ராஜீவ்காந்தி நகரில் கால்வாய், ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்தில் வீ.சி.மோட்டூர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு மின் மோட்டார், ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்தில் 1 லட்சம் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பைப்லைன், ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தில் முருகர் கோவில் புதிய கால்வாய், ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்தில் வீ.சி.மோட்டூர் கிராமம் பாலாற்று பைப்லைன், வன்னிவேடு மோட்டூர் பாலாற்று பைப்லைன், ரூ.3 லட்சத்து 94 ஆயிரத்தில் வீ.சி.மோட்டூர் கிராமம், வன்னிவேடு மோட்டூர் பாலாற்றில் மின் கேபிள் வயர் அமைத்தது, ரூ.94 ஆயிரத்தில் ராஜீவ் காந்தி நகரில் பைப்லைன், ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தில் புதிய ஆழ்துளை கிணறு, பைப்லைன் அமைத்ததுள்ளோம்.
ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்தில் தனலட்சுமிநகரில் சிமெண்டு சாலை, ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்தில் அருந்ததியர் காலனியில் கால்வாய், ரூ.3 லட்சத்து 37 ஆயிரத்தில் புதிய ஆழ்துளை கிணறு, ரூ.3 லட்சத்து 83 ஆயிரத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய், ரூ.4 லட்சத்து 11 ஆயிரத்தில் வன்னிவேடு மோட்டூர் பஜனைகோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய், ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்தில் ஆச்சாரி தெருவில் கழிவுநீர் கால்வாய், ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்தில் வீ.சி.மோட்டூர் கங்கையம்மன் கோவில் தெருவில் கல்வெட்டு, ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தில் சமுதாய நீர் உறிஞ்சி குழி, ரூ.83 ஆயிரத்து 700 மதிப்பில் புதிய மின் மோட்டார் மற்றும் பைப்லைன், ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்தில் பாரதி நகரில் பைப் லைன் ஆகிய பணிகள் நடைபெற்றுள்ளது.
ரூ.3 கோடியில்...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.25 லட்சத்தில் 1 லட்சம் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ரூ.23 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம், ரூ.9 லட்சத்து 94 ஆயிரத்தில் வீ.சி.மோட்டூர் பிள்ளையார் கோவில் தெரு, வன்னிவேடு மோட்டூரில் கல்வெட்டு ஆகிய பணிகள் நடந்துள்ளது. ரூ.90 லட்சத்தில் வீ.சி.மோட்டூரில் புதிய பள்ளி கட்டிடம், ரூ.30 லட்சத்து 12 ஆயிரத்தில் வன்னிவேடு மோட்டூரில் பள்ளிக்கட்டிடம் என மொத்தம் ரூ.3 கோடி அளவில் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ரூ.35 லட்சம், ரூ.37 லட்சத்தில் 2 குளங்கள் வெட்டி இருக்கிறோம்.
ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்தில் வன்னிவேடு மோட்டூரில் சிமெண்டு சாலை, ரூ.20 லட்சத்து 31 ஆயிரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர், ரூ.3 லட்சத்து 87 ஆயிரத்தில் வன்னிவேடு மோட்டூர் 4-வது குறுக்கு தெருவிலும், ரூ.3 லட்சத்து 32 ஆயிரத்தில் ஓம்சக்தி கோவில் தெருவிலும், ரூ.5 லட்சத்து 72 ஆயிரத்தில் பிள்ளையார் கோவில் தெருவிலும் சிமெண்டு ரோடு, ரூ.8 லட்சத்து 59 ஆயிரத்தில் திருச்சிற்றம்பலம் நகரில் ஈரடுக்கு ஜல்லி சாலை ஆகிய பணிகள் முடிந்துள்ளது.
12 பயனாளிகளுக்கு வீடு
வீ.சி.மோட்டூரில் புதிய ரேஷன் கடை, புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையம், புதிய அங்கன்வாடி மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.3½ லட்சத்தில் மேலாண்டை தெருவில் புதிய சிமெண்டு சாலை, ரூ.3½ லட்சத்தில் வன்னிவேடு மோட்டூரில் கால்வாய் பணி, ரூ.10 லட்சத்தில் பாலாற்று பகுதியில் புதிய மாற்றுப் பாதையில் பைப்லைன் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது.
ஒன்றிய நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்திட எனது சொந்த செலவில் ரூ.1 லட்சம் வழங்கியுள்ளேன். கடர் மெமோரியல் மருத்துவமனை சார்பில், 30 நர்சுகள் அடங்கிய மருத்துவ குழுவினர் தினமும் வீடு வீடாகச் சென்று மருத்துவ பரிசோதனை செய்கிறார்கள். 4 கால்நடை மருத்துவ முகாம், 2 கண் சிகிச்சை முகாம் நடத்தியுள்ளோம். வாலேரி பகுதியில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு வீடு வழங்கியுள்ளோம்.
விளையாட்டு மைதானம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், மாந்தோப்பு பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் மாவட்ட அளவிலான விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளேன். அடிப்படை பிரச்சினைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம்.
கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஜெகத்ரட்சகன் எம்.பி., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் ஷேசா வெங்கட், மாவட்ட கவுன்சிலர் மாலதி கணேசன், ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கணேசன் ஆகியோரின் ஒத்துழைப்போடு, துணைத்தலைவர் ஆர்.பிரியா ராஜா, வார்டு உறுப்பினர்கள் எஸ்.வேலு, எஸ்.ரவி, எஸ்.அம்பிகேஸ்வரி, எம்.செல்வி, பிஅனிதா, மா.ஞானபிரகாஷ், மு.சசிரேகா க.ஈழவேந்தன் ஆகியோருடன் இணைந்து மாவட்டத்தின் முன்மாதிரி ஊராட்சியாக மாற்ற பாடுபட்டு வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.