தோட்டத்தில் மாடு மேய்த்ததில் தகராறு; பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்கு

தோட்டத்தில் மாடு மேய்த்ததில் தகராறில் பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-08-18 23:48 GMT

காட்டுப்புத்தூர்:

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே உள்ள பாரதிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணசாமியின் மனைவி விஜயலட்சுமி(வயது 50). இவர் தனது தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாராட்சிபட்டியை சேர்ந்த மனோகரனின் மனைவி கிருத்திகா(29) என்பவர் தனது தோட்டத்தில் மாடுகளை மேய்ப்பதற்காக ஓட்டி வந்துள்ளார். இருவரது தோட்டமும் அருகருகே உள்ளது. இந்நிலையில் மாடு மேய்த்ததில் ஏற்பட்ட தகராறில் அவர்கள் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர். இதையடுத்து இருவரின் குடும்பத்தினரும் அங்கு வந்து ஒருவரையொருவர் திட்டி, தாக்கிக்கொண்டனர். இதில் விஜயலட்சுமி(50) காயமடைந்து தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதேபோல் எதிர் தரப்பை சேர்ந்த மனோகரன்(44) என்பவருக்கும் காயம் ஏற்பட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விஜயலட்சுமி, மனோகரன் ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் மனோகரன், கிருத்திகா, வீரப்பன், நல்லம்மாள் மற்றும் விஜயலட்சுமி, கோபால், குணசேகரன், கிருஷ்ணசாமி ஆகிய 8 பேர் மீது காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்