இரு தரப்பினரிடயே தகராறு; 6 பேர் மீது வழக்கு
தியாகதுருகம் அருகே இரு தரப்பினரிடயே ஏற்பட்ட தகராறில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே உள்ள வடதொரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மனைவி ராணி (வயது 45). சம்பவத்தன்று குறும்படம் எடுப்பதற்கான வேன், ராணியின் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தது. இது சம்பந்தமாக அதே கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் சிவக்குமார்(40) என்பவரிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரிடையே மோதலாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் திட்டி, தாக்கிக் கொண்டனர். இதில் ராணி, சிவக்குமார் ஆகியோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ராணி கொடுத்த புகாரின் பேரில் சிவக்குமார், அவரது மனைவி செல்வி ஆகிய 2 பேர் மீதும், சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் ராஜா, ராணி, மகள் சங்கீதா, உறவினர் ஏழுமலை ஆகிய 4 பேர் மீதும் தியாகதுருகம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.