கோவில் விழாவில் இருதரப்பினரிடையே தகராறு
கோவில் விழாவில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட மல்லாக்கோட்டை கிராமத்தில் சந்திவீரன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டப்பட்ட இக்கோவிலில் ஆனி மாதம் எருது கட்டு விழாவை முன்னிட்டு கொடிவலைதல் விழா நேற்று நடைபெற்றது. இத்திருவிழாவில் முதல் மரியாதை வழங்குவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.