பாழடைந்து வரும் ஊரக வாழ்வாதார மையம்
பாழடைந்து வரும் ஊரக வாழ்வாதார மையத்தை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்காயம் ஒன்றியம் வெள்ளக்குட்டை கிராமத்தில் ஊரக வாழ்வாதார மையம் சார்பில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. திறப்பு விழா காணாமலேயே அப்படியே பாழடைந்து வரும் நிலையில் உள்ளது. இந்த மையத்தில் இ.சேவை மையம் உள்ளிட்டவை தொடங்க அரசு உத்தரவிட்டும், இதுவரை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.