கோவிலுக்கு வந்த பக்தர் திடீர் சாவு
கோவிலுக்கு வந்த பக்தர் திடீரென இறந்தார்.
விக்கிரமசிங்கபுரம்:
நெல்லை தாழையூத்து கரையிருப்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 63). ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார். இதையடுத்து அவரது உடலை குடும்பத்தினர் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர்.