முப்பிடாதி அம்மன் கோவில் விழாவில் பறவைக்காவடி எடுத்து வந்த பக்தர்

செங்கோட்டை முப்பிடாதி அம்மன் கோவில் விழாவில் பறவைக்காவடி எடுத்து வந்த பக்தர்

Update: 2023-05-04 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை முப்பிடாதி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 25-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வந்தது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை, தீபாராதனை, கும்மியாட்டம், கோலாட்டம், திருவிளக்கு பூஜை, சிறப்பு சொற்பொழிவுகள் உள்ளிட்டவை நடந்தது. விழாவில் கொடை நாளன்று காலை குற்றாலத்தில் புனிதநீர் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் பொங்கலிடுதல், முளைப்பாரி-பூந்தட்டு ஊர்வலம் நடந்தது. பின்னர் செங்கோட்டை பாம்பே ஸ்டோர் விநாயகர் கோவிலில் இருந்து சுப்புரமணியத்தெரு பகுதியை சேர்ந்த ராம்தாஸ் என்ற பக்தர் 2-வது ஆண்டாக பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக வந்தார். அதன்பிறகு இரவில் தீச்சட்டி, முளைப்பாரி ஊர்வலம், அம்பாள் சப்பர வீதிஉலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்