ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடரப்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Update: 2023-04-17 17:07 GMT

சென்னை,

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த நிலையில், திமுக மீது அன்னாமலை ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைப்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், என்னிடம் இவ்வளவு கேள்வி கேட்பதற்கு பதில் அவரிடம் யாராவது கேட்கிறீர்களா என கேட்டார். தொடர்ந்து பேசிய அவர், திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்