ஊருக்குள் புகுந்த மானை தெருநாய்கள் துரத்தியதால் காயம்
ஊருக்குள் புகுந்த மானை தெருநாய்கள் துரத்தியதால் காயம் அடைந்தது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் வடக்கு தெரு பகுதியில் நேற்று 1½ வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்று காட்டுப்பகுதியில் இருந்து தப்பித்து ஊருக்குள் புகுந்தது. அப்போது அங்கிருந்த தெருநாய்கள் மானை துரத்தவே கம்பி வேலி, சுவர்கள் என பல்வேறு இடங்களில் மோதி காயங்கள் ஏற்பட்டன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் தெருநாய்களை விரட்டி மானை மீட்டனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த திருமானூர் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு மற்றும் வனக்காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மானை மீட்டு கால்நடை டாக்டர் மூலம் சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த மான் கரவெட்டி பறவைகள் சரணாலய பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.