கிணற்றுக்குள் தவறி விழுந்த மான் சாவு
கிணற்றுக்குள் தவறி விழுந்த மான் இறந்தது.
கெங்கவல்லி:
கெங்கவல்லி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் வசிப்பவர் சேகர். இவருடைய விவசாய தோட்டத்தில் மான்கள் சுற்றி திரிந்தன. இதில் ஒரு மான் அங்குள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் நிலைய அலுவலர் வேலுமணி தலைமையில் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறந்து கிடந்த மானை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றுக்குள் மான் இறந்து கிடந்த சம்பவம் வனத்துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.