மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக இணைய தளம்

அரசு திட்டங்கள் பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-07 18:15 GMT

திருப்பத்துார் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் செயல்படுத்தப்படும் 5 திட்டங்களுக்கு இ சேவை இணையதளம் வழியாக மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிப்பதற்கு வசதியாக பிரத்யேக இணைய தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, கல்வி உதவித்தொகை, உபகரணங்கள், வங்கி கடன் மானியம், திருமண உதவித் தொகை, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ஆகியவற்றுக்கு தங்கள் அருகாமையில் உள்ள இ சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான இணையதள ரசீதை பெற்றுக்கொள்ளுமாறு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்