பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை பிரச்சினைக்கு தீர்வு காண பிரத்யேக மையம்

தஞ்சை, பட்டுக்கோட்டையில் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை பிரச்சினைக்கு தீர்வு காண பிரத்யேக மையம் அமைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-10 20:06 GMT

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் தஞ்சை மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய 2 வட்டாரங்களில் பாலின சேவை மையம் என்ற வானவில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையமானது வட்டார அளவிலான கூட்டமைப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது.குடும்ப வன்முறை மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பிரதயேக அமைப்பாக இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையம் தஞ்சை வட்டாரத்தில் வட்டார சேவை மையத்திலும், பட்டுக்கோட்டை வட்டாரத்தில் ஆலடிக்குமுளை கிராம சேவை மையத்திலும் செயல்பட்டு வருகிறது.இந்த பாலின சேவை மையத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தொடர்புடைய வட்டார இயக்க மேலாளர்களை தொடர்பு கொண்டு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்