இறந்து கிடந்த காட்டுயானை

இறந்து கிடந்த காட்டுயானை

Update: 2022-11-16 18:45 GMT

வால்பாறை

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை வனச்சரகம் பூணாச்சி வனச்சுற்று பகுதியில் வனப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பர் ஆழியாறு பள்ளம் பகுதியில் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து வால்பாறை வனச்சரக அலுவலர்(பொறுப்பு) மணிகண்டன், ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் பார்கவாதேஜாவுக்கு தகவல் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமையில் வனச்சரகர் மணிகண்டன் முன்னிலையில் வனத்துறையின் கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயராகவன், வால்பாறை அரசு கால்நடை டாக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் இறந்து கிடந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் வனத்துறையினர் கூறும்போது, இறந்து கிடந்த பெண் யானைக்கு 45 வயது முதல் 50 வயது இருக்கும். யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிகளவிலான ரத்தம் வெளியேறியதால் யானை இறந்துள்ளது என்றனர். தொடர்ந்து யானையின் உடல் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்