வாய்க்காலில் மிதந்த பிணம்

வாய்க்காலில் பிணம் மிதந்தது.

Update: 2022-10-20 21:07 GMT

திருச்சி கே.கே.நகரில் இருந்து உடையான்பட்டி வழியாக கட்டளை வாய்க்கால் மாத்தூர் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து சூரியூர் வரை செல்கிறது. இந்த வாய்க்காலில் மிதந்து வந்த பிணம் முட்செடிகளில் சிக்கியிருப்பதாக, அப்பகுதி மக்கள் ஏர்போர்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏர்போர்ட் போலீசார், பிணம் கிடந்த பகுதி நவல்பட்டு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியாக இருக்குமோ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நவல்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், அந்த பகுதியானது மாத்தூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தார் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்ததில், பிணம் கிடந்த பகுதி மாத்தூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று இரவு சுமார் 8 மணி வரை அங்கு மாத்தூர் போலீசார் சென்று பார்க்கவில்லை.

இந்த நிலையில் அந்த போலீஸ் நிலையத்தில் இருந்து, தங்கள் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் வாய்க்கால்கள் எதுவும் வரவில்லை என்று கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது பற்றி கிராம நிர்வாக அலுவலர் திருவெறும்பூர் கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்ததாக தெரிகிறது.

மேலும் இரவு வரை அந்த பிணம் அப்புறப்படுத்தப்படாததால் அப்பகுதி அதிருப்தியடைந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் வேதனை அடையும் நிலை ஏற்பட்டது மேலும் இரவு நேரமானதால் அந்த உடலை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும் காவல்துறையினர் இதற்கு மேல் வந்தாலும் அந்த உடலை நாளை காலை தான் அகற்ற முடியும் எனவும் இதனால் நீரில் இருந்து வரும் உடலானது மிகுந்த சேதம் அடையும் எனவும் தெரிவித்து வருகின்றனர் இதனால் அந்த உடலை மீட்பதிலும் பின்னர் அவர் யார் என்பது குறித்த விசாரணை நடத்துவதற்கும் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்