மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு ஒரு நாள் கல்வி சுற்றுலா

ஊட்டியில் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு ஒரு நாள் கல்வி சுற்றுலாவை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.

Update: 2022-12-22 18:45 GMT

ஊட்டி

ஊட்டியில் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு ஒரு நாள் கல்வி சுற்றுலாவை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.

ஒருநாள் கல்வி சுற்றுலா

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் கல்வி சுற்றுலா அழைத்து சென்றது. இதனை மாவட்ட கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு பழங்களை வழங்கினார். சுற்றுலா வாகனம் ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, கர்நாடக பூங்கா, ஊட்டி படகு தொட்டபெட்டா சிகரம் மற்றும் பைக்கார படகு இல்லத்தில் முடிவடைந்தது.

இதில் 40 மாற்றுதிறனாளி குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள் 30 நபர் என மொத்தம் 70 நபர் இந்த சுற்றுலாவில் கலந்து கொண்டனர்.

அரசுக்கு நன்றி

சுற்றுலா வாகனத்தில் பயணம் செய்த மாற்றுதிறனாளி மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இக்கல்வி சுற்றுலாவை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு அரசிற்கும், மாவட்ட கலெக்டர் நன்றிகளை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடாச்சலம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உமாசங்கர், மலர்விழி, மாவட்ட சுற்றுலா அலுவலர், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்