சாலையில் ஆபத்தான பள்ளம்

சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-09 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் பேரூராட்சி 4-வது வார்டில் குருவிப்பாடி பகுதி அமைந்துள்ளது.இந்த இடத்தில் ஓடம் போக்கி ஆற்றில் இருந்து பிரிந்து வரும் பாண்டி சோழமங்கலம் வாய்க்கால் செல்கிறது. கோகூர் செல்லும் சாலை, திருவாரூர் -நாகை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் ஆபத்தான பள்ளம் ஏற்பட்டுள்ளது. கோகூர், கீழ்வேளூர், நாகை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அந்த பள்ளத்தால் தடுமாறி வாய்க்காலில் விழுந்து விடுவதால், அங்கு தினமும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. அதிக வாகன போக்குவரத்து மற்றும் இரவு நேரத்தில் மின்விளக்கு இல்லாத காரணத்தால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதன் காரணமாக . அந்த பகுதியில் விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும் அந்த திருப்பத்தில் உள்ள பாண்டி சோழமங்கலம் வாய்க்கால் பகுதியில் இருபுறமும் சுற்றுச்சுவர், எச்சரிக்கை அறிவிப்பு போர்டு அமைக்க வேண்டும்.எனவே விபத்துகள் ஏற்படுத்தும் அபாய பள்ளத்தை சீரமக்க வேண்டும். மேலும் மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும். இதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்