தவறி விழுந்து சுங்கச்சாவடி ஊழியர் சாவு
தவறி விழுந்து சுங்கச்சாவடி ஊழியர் உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகே உள்ள பொம்மனப்பாடி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நீதியரசன் (வயது 56). இவர், பெரம்பலூர் புறநகர் பஸ் நிலையத்தில் தற்காலிக நேர காப்பாளராக பணிபுரிந்து, தற்போது சமயபுரம் சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில், நீதியரசன் பெரம்பலூர் வெங்கடாஜலபதி நகரில் உள்ள அவர் குடியிருக்கும் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது நகராட்சி அலுவலகம் பின்புறம் அவர் தவறி கீழே விழுந்து இறந்து கிடந்தார். நேற்று முன்தினம் அந்த வழியே சென்றவர்கள் அதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.