அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்துக்கும் மேல் ஆனது.

Update: 2023-08-02 13:46 GMT

திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்துக்கும் மேல் ஆனது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் அதிகாலை 3.25 மணியளவில் தொடங்கி நேற்று அதிகாலை 1.05 மணியளவில் பவுர்ணமி நிறைவடைந்தது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

கிரிவலம் சென்ற பக்தர்கள் நேற்று காலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் சென்றனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்த சுமார் 3 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்