நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து ஊராட்சி மிளகாய் பட்டியை சேர்ந்தவர் சீனி (வயது 64). விவசாயி. இவர், தனது வீட்டில் 2 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இதில், ஒரு பசு நேற்று 2 கன்றுக்குட்டிகளை ஈன்றது. இதுகுறித்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனையடுத்து கிராம மக்கள் சீனி வீட்டுக்கு வந்து பசு மற்றும் கன்றுகளை ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.