லாரி மோதி மாடு பலி

வேலூரில் லாரி மோதி மாடு பலியானது.

Update: 2022-09-17 16:48 GMT

வேலூர் சத்துவாச்சாரி கோர்ட்டு எதிரே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. எதிர்பக்கத்தில் இருந்து சென்னை-பெங்களூரு சாலைக்கு காளை மாடு ஒன்று வந்தது. அப்போது அந்த வழியாக சென்ற லாரி மாட்டின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. அதில் மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த சத்துவாச்சாரி போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும் மாட்டின் உடலை கிரேன் உதவியுடன் அங்கிருந்து அகற்றினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்துவாச்சாரி பகுதியில் ஏராளமான மாடுகள் சாலையில் அவிழ்த்து விடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்