சாக்கடை கால்வாயில் சிக்கிய பசுமாடு
காட்டுமன்னார்கோவில் அருகே சாக்கடை கால்வாயில் சிக்கிய பசுமாடு தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட காங்கிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(வயது 35). இவரது பசுமாடு ஒன்று நேற்று காலை அதே பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்தது. இதுபற்றி சரவணன் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் தகவல் அறிந்து காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கால்வாயில் சிக்கிய பசு மாட்டை உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரான சரவணனிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.