காளை விடும் விழாவில் மாடு முட்டி கட்டிட மேஸ்திரி பலி

ஆலங்காயம் அருகே நடந்த காளை விடும் விழாவில் மாடு முட்டியதில் கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 10 பேர் காயம் அடைந்தனா்.

Update: 2023-04-11 17:11 GMT



ஆலங்காயம் அருகே நடந்த காளை விடும் விழாவில் மாடு முட்டியதில் கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 10 பேர் காயம் அடைந்தனா்.

காளை விடும் விழா

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்த உமையப்பநாயக்கனூர் பகுதியில் காளை விடும் விழா நடைபெற்றது..

வாணியம்பாடி தாசில்தார் சம்பத் உறுதிமொழி ஏற்று காளை விடும் விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலம் குப்பம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

மாடு முட்டி கட்டிட மேஸ்திரி பலி

விழாவில் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த பீமகுளம் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சக்திவேல் (வயது 28) என்பவர் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்