கூடலூர்
மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் நேற்று முன்தினம் தனது கால்நடை வழக்கம்போல் மேய்ச்சலுக்கு விட்டார். ஆனால் வெகு நேரமாகியும் பசுமாடு வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து அப்பகுதி முழுவதும் தேடினார். அப்போது புலி கடித்து பசு மாடு உயிரிழந்து கிடப்பதை கண்டார். இது குறித்து சிங்காரா வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.