கழிவுநீரை குடித்த பசுமாடு திடீர் சாவு
கழிவுநீரை குடித்த பசுமாடு திடீர் சாவு
ராமநாதபுரம் அருகே உள்ள இளமனூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது52). இவர் பசு மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான பசுமாட்டினை இளமனூரில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது பசுமாடு ஒரு ஐஸ்கிரீம் கம்பெனியில் இருந்து வெளியேறிய கழிவுநீரை குடித்ததாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக மாட்டினை தேடி வந்த மாணிக்கம் மாட்டினை பிடித்து கொண்டு சென்றுவிட்டார். சிறிதுநேரத்தில் மாடு உடல்நிலை பாதிக்கப்பட்டு சோர்வாக இருந்துள்ளது. கால்நடை டாக்டரை வைத்து சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டது. இதுகுறித்து மாணிக்கம் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.